ராஜஸ்தானை வீழ்த்தி முதலிடத்திற்கு முன்னேறிய குஜராத் டைட்டன்ஸ்!

Published On:

| By christopher

gujarat beat rr by 58 runs move 1st spot in table

ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் 58 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் வெற்றி பெற்று, புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. gujarat beat rr by 58 runs move 1st spot in table

தனது சொந்த மைதானமான அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று (ஏப்ரல் 9) இரவு ராஜஸ்தான் ராயல்ஸை எதிர்கொண்டது குஜராத் டைட்டன்ஸ்.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பந்துவீச, குஜராத் அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது.

அந்த அணி 20 ஓவர்கள் முடிவில், 6 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக தொடக்க வீரர் சாய் சுதர்சன் 82 ரன்கள் குவித்தார்.

தொடர்ந்து விளையாடிய ராஜஸ்தான் அணி, குஜராத் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் வெறும் 159 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இதன்மூலம் 58 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற குஜராத் டைட்டன்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது.

அதிரடியாக ஆடி வெற்றியை உறுதி செய்த தமிழகத்தைச் சேர்ந்த சாய் சுதர்சன் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share