டெல்லி அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற குஜராத் அணி முதல் அணியாக பிளே ஆஃப் தொடருக்கு முன்னேறியது. GT sai and gill smashed dCi and get into play off
டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நேற்று (மே 18) இரவு நடைபெற்ற போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதின.
டாஸ் வென்ற குஜராத் பந்துவீச்சைத் தேர்ந்தெடுக்க, முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி அதிரடி ஆட்டத்தை கையில் எடுத்தது.
அந்த அணியின் தொடக்க வீரர் டூ பிளெசிஸ் 5 ரன்களில் ஆட்டமிழந்தார் என்றாலும், மற்றொரு தொடக்க வீரராக களமிறங்கிய கே.எல்.ராகுல் ருத்ரதாண்டவம் ஆடினார். கடைசி வரை ஆட்டமிழக்காமல் ஆடிய அவர், 14 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்களுடன் 65 பந்துகளில் 112 ரன்கள் குவித்தார்.

இதன் காரணமாக அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் எடுத்தது.
தொடர்ந்து களமிறங்கிய குஜராத் அணியின் தொடக்க வீரர்களான சாய் சுதர்சன் மற்றும் சுப்மன் கில் இருவரும் ராகுலுக்கு போட்டியாக அதிரடியாக பேட்டிங் செய்தனர்.
இருவரும் டெல்லி அணியின் பந்துவீச்சை பவுண்டரி, சிக்ஸர்களாக பறக்கவிட்டு 19 ஓவர்கள் முடிவில் 205 ரன்கள் எடுத்து வெற்றியை உறுதி செய்தனர்.
சாய் சதர்சன் 12 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் ஐபிஎல் இரண்டாவது சதத்தை பதிவு செய்தார். கேப்டன் கில் 3 பவுண்டர், 7 சிக்ஸர்களுடன் 93 ரன்கள் குவித்தார்.
இந்த வெற்றியின் மூலம் குஜராத் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியதுடன், ஐபிஎல் 2025 பிளே ஆஃப்க்கு முதல் அணியாக தகுதி பெற்று சாதனை படைத்தது.
மேலும் அந்த அணியுடன் சேர்ந்து பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகளும் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
ஐபிஎல் வரலாற்றில் ஒரே நேரத்தில் மூன்று அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.