ADVERTISEMENT

குரூப் 4 முடிவு எப்போது?: டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு!

Published On:

| By Kavi

குரூப் 4தேர்வு முடிவுகள் வரும் மார்ச் மாதம் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

கடந்த 2022ஜூலை மாதம் 7,301இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் உள்ளிட்ட குரூப் 4 பணியிடங்களுக்கான தேர்வு நடைபெற்றது.

ADVERTISEMENT

இதற்கான முடிவு அக்டோபரில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இதுவரை வெளியாகவில்லை.

தேர்வர்கள் ரிசல்ட் எப்போது வரும் என்று காத்திருக்கும் நிலையில், அரசியல் கட்சிகள் உடனடியாக முடிவை வெளியிட வேண்டும் என்று அழுத்தம் கொடுத்தனர்.

ADVERTISEMENT

இந்த சூழலில் இன்று (பிப்ரவரி 14) டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் பல்வேறு துறைகளுக்கான காலி பணியிடங்களை நிரப்பும் பொருட்டு ஆண்டு தோறும் பல்வேறு தேர்வுகளை நடத்தி வருவது அனைவரும் அறிந்ததே.

ADVERTISEMENT

இந்நிலையில் ஒருங்கிணைந்த சார்நிலைப் பணிகள் IV (தொகுதி IV) தேர்வுக்கான எழுத்துத் தேர்வினை தேர்வாணையம் கடந்த 24. 7.2022 அன்று நடத்தியது.

இதில் 18 லட்சத்து 36 ஆயிரத்து 535 விண்ணப்பதாரர்கள் பங்கேற்றனர். இந்திய அளவில் ஒப்பிடும்போது அனைத்து தேர்வாணையங்களாலும் நடத்தப்பட்ட தேர்வுகளிலேயே மிக அதிகமான விண்ணப்பதாரர்களைக் கொண்டு நடத்தப்பட்ட தேர்வு இதுவாகும்.

மேலும் எவ்வித தவறுகளுக்கும் இடமளிக்காத வகையில் தேர்வாணையத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட இரு பகுதிகளை கொண்ட ஒருங்கிணைந்த விடைத்தாள் முறையினால் விடைத்தாள்களின் இரு பகுதிகளையும் தனித்தனியே இரு முறை ஸ்கேன் செய்து,

அதன் பின்னர் விண்ணப்பதாரர்கள் விடைத்தாள்களில் செய்துள்ள பிழைகளை கணினி மூலம் அடையாளம் காணப்பட்டு அவற்றை அலுவலர்கள் மூலம் நேரடி சரிபார்ப்பு செய்யும் பணிகளுக்கு அதிகப்படியான கால அவகாசம் தேவைப்படுகிறது.

விடைத்தாள்களில் தேர்வாணைய அறிவுரைகளை மீறி தேர்வர்களால் செய்யப்படும் ஏறக்குறைய 16 விதமான பிழைகளை சரி பார்க்க வேண்டியுள்ளது.

கடந்த 2014 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில் சுமார் 10 முதல் 17.5 லட்சம் தேர்வர்கள் பங்கேற்ற நிலையில் 2022 இல் நடைபெற்ற தேர்வில் ஏறத்தாழ 18 லட்சத்துக்கும் கூடுதலான தேர்வர்கள் பங்கேற்றுள்ளனர் என்பதும்,

இம்முறை விடைத்தாள்களின் இரு பாகங்களும் தனித்தனியே ஸ்கேன் செய்து பிழைகள் சரிபார்ப்பு பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது.

அதன்படி மொத்தமாக ஸ்கேன் செய்ய வேண்டிய ஓஎம்ஆர் விடைத்தாள்களின் எண்ணிக்கை 36 லட்சத்திற்கும் கூடுதலாக உள்ளது.

இது கடந்த தேர்வுகளை ஒப்பிடும்போது ஏறக்குறைய மும்மடங்கு கூடுதலான வேலையை உள்ளடக்கியதாக உள்ளது.

மேற்கண்ட காரணங்களினாலும் இதே காலத்தில் தேர்வாணையம் பல்வேறு பணி தேர்வுகளையும் மற்றும் துறை தேர்வுகளையும் தொடர்ந்து நடத்தி முடிவுகளை வெளியிட்டு வருவதாலும்,

தேர்வர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இடையறாது பணியாற்றி தேர்வின் அனைத்து மிக முக்கிய பணிகளையும் மிகுந்த கவனத்துடன் முடித்து எவ்வித தவறுக்கும் இடம் தராமல் இத்தேர்வு முடிவுகள் வரும் மார்ச் மாதத்தில் வெளியிடப்படும்” என்று.

எனவே தேர்வர்கள் தேர்வு குறித்து வெளிவரும் அடிப்படை ஆதாரம் இல்லாத தகவல்களைப் பொருட்படுத்த வேண்டாம் என்றும் டிஎன்பிஎஸ்சி கேட்டுக் கொண்டுள்ளது.
பிரியா

அடுத்த இரண்டு நாட்களுக்கு வறண்ட வானிலை!

பழ.நெடுமாறன் மீது வழக்கு? – பாஜகவிடம் விலைபோனதாக புகார்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share