ADVERTISEMENT

குரூப் 2 தேர்வு எப்போது? டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

Published On:

| By Kavi

குரூப் 2 தேர்வுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. Group 2 exam TNPSC announcement

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அரசு பணிகளுக்கான தேர்வை நடத்தி வருகிறது. கடந்த ஜூலை 12 ஆம் தேதி குரூப் 4 பணியிடங்களுக்கான தேர்வை நடத்தியது.

ADVERTISEMENT

இந்தநிலையில் இன்று (ஜூலை 15) குரூப் 2 மற்றும் 2ஏ பணியிடங்களுக்கான தேர்வு தேதியை அறிவித்துள்ளது.

இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு II (தொகுதி II மற்றும் IIA பணிகள்)-இல் உள்ள பதவிகளுக்கான நேரடி நியமனத்திற்கு விண்ணப்பங்கள் இணையவழி மூலம் மட்டும் வரவேற்கப்படுகின்றன.

ADVERTISEMENT

 குரூப் 2 மற்றும் 2ஏ பணிகளுக்கு மொத்தம் 645 பணயிடங்கள் காலியாக உள்ளது. இதில் குரூப் 2 பணியிடங்களுக்கு 50 மற்றும் குரூப் 2ஏ பணியிடங்களுக்கு 595 இடங்கள் காலியாக உள்ளது,

சார்பதிவாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், முதுநிலை வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட 645 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. Group 2 exam TNPSC announcement

ADVERTISEMENT

இணையவழி விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள்: 13.08.2025
விண்ணப்பத் திருத்தச் சாளர காலம்: 18.08.2025 முதல் 20.08.2025 11.59 வரை
முதல்நிலைத் தேர்வு நடைபெறும் நாள் மற்றும் நேரம் :28.09.2025 காலை 09.30 முதல் 12.30 வரை
முதன்மைத் தேர்வு நடைபெறும் நாள் முதல்நிலைத் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் போது வெளியிடப்படும்.

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்து கொள்வோம்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share