ADVERTISEMENT

குரூப் 2 தேர்வு: விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்… மிஸ் பண்ணிடாதீங்க!

Published On:

| By Selvam

குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பதற்கான காலஅவகாசம் இன்றுடன் (ஜூலை 20) நிறைவடைகிறது.

குரூப் 1, குரூப் 2 மற்றும் குருப் 4 உள்ளிட்ட போட்டித்தேர்வுகள் மூலமாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பி வருகிறது.

ADVERTISEMENT

இதுவரை குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வுகளுக்கு நேர்காணல் இருந்து வந்த நிலையில், நேர்முக தேர்வு கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் குரூப் 2 தேர்வுக்கு இலவச பயிற்சிகள் வழங்கப்பட்டு வந்தது.

இந்தநிலையில், இந்த ஆண்டு உதவி ஆய்வாளர், துணை வணிகவரி ஆய்வாளர், வனவர் உள்ளிட்ட குரூப் 2 தேர்வில் 507 காலிப்பணியிடங்களுக்கும், உதவியாளர், கணக்கர், நேர்முக உதவியாளர் என குரூப் 2ஏ தேர்வில் 802 காலிப்பணியிடங்கள் என மொத்தம் 2,327 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு கடந்த ஜூன் மாதம் வெளியானது. அதன்படி குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வுகள் வரும் செப்டம்பர் 14-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT

இந்த தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நேற்றுடன் (ஜூலை 19) நிறைவடைந்தது. ஆனால், மைக்ரோசாப்ட் தொழில்நுட்ப கோளாறு காரணமாக கடைசி நேரத்தில் விண்ணப்பிப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

ADVERTISEMENT

இதனால் தேர்வர்களின் கோரிக்கையால் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் இன்று வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தேர்வர்கள் www.tnpsc.gov.in என்ற இணையத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அரசு பணியாளர்கள் தேர்வாணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மைக்ரோசாப்ட் பிரச்சனை: 2-வது நாளாக சென்னையில் விமான சேவை பாதிப்பு!

தூத்துக்குடி: தனியார் ஆலையில் அமோனியா வாயுக்கசிவு… 21 பேருக்கு மூச்சுத்திணறல்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share