கோடையின் வெப்பத்தைத் தணிக்க மினரல் வாட்டர், பழரசங்கள், மென்பானங்கள், ஆற்றல் பானங்கள், பீர் என நம் வாழ்க்கையில் 8,000 ஆண்டுகளாக பானங்கள் இடம்பெற்று வருகின்றன. ஆனால் கோடைக்கு இதமளிக்கவும், உடலுக்கு ஆரோக்கியம் தருவது சில மட்டுமே. அவற்றில் ஒன்று இந்த வாழைப்பழம் வேர்க்கடலை மில்க்ஷேக்.
என்ன தேவை?
- பச்சை வேர்க்கடலை (தோலுடன்) – 100 கிராம்
- பேரீச்சம்பழம் – 3 (கொட்டை நீக்கவும்)
- வாழைப்பழம் – 2
- தண்ணீர் – 2 கப்
- லவங்கப்பட்டைத்தூள் – அரை சிட்டிகை
எப்படிச் செய்வது?
வேர்க்கடலையை முதல் நாள் இரவே ஊறவைக்கவும். மறுநாள் காலை ஊறவைத்த வேர்க்கடலையுடன் மற்ற எல்லா பொருள்களையும் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். வடிகட்டிப் பரிமாறவும்.