ADVERTISEMENT

ஹெல்த் டிப்ஸ்: மன அழுத்தத்தை விரட்டும் மகா மந்திரங்கள்!

Published On:

| By Kavi

Great mantras to get rid of stress

எந்தவொரு செயலை செய்யத்தொடங்கினாலும் அது வெற்றி அடைவதற்கு அன்றாட பழக்கவழக்கங்களில் பின்பற்றும் விஷயங்களே முக்கிய பங்கு வகிக்கின்றன. ஒரு சில நடைமுறைகளைப்  பின்பற்றி வருவதன் மூலம் எந்தவொரு வேலையையும் மன அழுத்தம்  இல்லாமல் சுமுகமாக முடித்து விடலாம். அதற்கான மகா மந்திரங்கள் இதோ…

காலையில் எழுந்ததும் தியானம், உடற்பயிற்சி, பாடல்கள் கேட்பது என ஏதாவதொரு செயலில் சில நிமிடங்கள் ஈடுபட வேண்டும். அதை ஒரு சம்பிரதாயமாகவே பின்பற்ற வேண்டும்.

ADVERTISEMENT

அப்படிச் செயல்படுவது நேர்மறையான எண்ணங்களையும், உடலுக்கு தேவையான ஆற்றலையும் கொடுத்து கவனச்சிதறலைத் தடுத்து, செய்யும் வேலையில் மனதை ஒருநிலைப்படுத்தும். மன அழுத்தம் இல்லாத நல்வாழ்வுக்கு வித்திடும்.

நெருக்கடியோ, நிர்பந்தமோ அதிகரிக்கும் சூழலில் ஐந்து நிமிடங்களோ அல்லது அதற்கும் குறைவான பொழுதிலோ முடித்துவிடும் பணிகளை உடனடியாக முடித்துவிட வேண்டும். அது வேலை அதிகமாக குவிவதைத் தடுக்கும். நெருக்கடியான சூழலை சமாளிப்பதற்கான தைரியத்தையும் கொடுக்கும்.

ADVERTISEMENT

இந்த எளிய பழக்கம் அடுத்த வேலையையும் இதே போல் துரிதமாக முடித்துவிடலாம் என்ற எண்ணத்தை உண்டாக்கி உற்சாகத்துடன் செயல்பட தூண்டும். அன்றைய நாள் முழுவதும் மன அழுத்தம் இல்லாமல் செயல்படுவதற்கும் வழிவகை செய்யும்.

எந்தவொரு செயலிலும் 80 சதவிகித பலன், ஒட்டுமொத்த முயற்சியின் 20 சதவிகிதத்தில் இருந்து கிடைத்து விடும். அதாவது, நாம் செய்யும் வேலைக்குக் கிடைக்கும் வெற்றியில் முயற்சிக்கு 20 சதவிகிதம் பங்கு இருக்கிறது.

ADVERTISEMENT

அதனால் எந்தவொரு செயல்பாடுகளிலும் கூடுதல் கவனம் செலுத்தி முயற்சி செய்யும்போது உற்பத்தி திறனை அதிகரிக்கலாம். மன அழுத்தம் இன்றி சாதிக்கவும் செய்யலாம்.

மனத் தெளிவுக்கும், உடல் ஆற்றல் திறனை அதிகரிப்பதற்கும் போதுமான ஓய்வு அவசியம். அதற்கு தூக்கத்திற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். அது உடலையும், மனதையும் ரீசார்ஜ் செய்ய உதவிடும்.

ஒவ்வொரு இரவும் உடலும், மனமும் போதுமான நேரம் ஓய்வு பெறுவதை உறுதி செய்வது ஆற்றலுடனும், உற்சாகத்துடனும் மறு நாளைய பொழுதை மன அழுத்தம் இன்றி தொடங்குவதற்கு துணைபுரியும்.

எந்தவொரு வேலையை செய்யத் தொடங்குவதாக இருந்தாலும் அதற்கான திட்டமிடலை முன்கூட்டியே வகுத்துவிட வேண்டும். முந்தைய நாள் இரவே சில நிமிடங்களை ஒதுக்கி சரியாக  திட்டமிட வேண்டும்.

இது வேலைக்கு மட்டுமல்ல. ஒவ்வொரு இரவு பொழுதிலும் சில நிமிடங்களை மறுநாளைய செயல்பாடுகளுக்கு ஒதுக்க வேண்டும்.

அப்படி முன்னோக்கி திட்டமிடுவது மறுநாள் செய்யப்போகும் விஷயங்களை எந்தவொரு மன அழுத்தமும் இல்லாமல் செய்து முடித்து வெற்றிவாகை சூட உதவும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

டூருக்கு கிளம்பியாச்சு… அப்டேட் குமாரு

டிஜிட்டல் திண்ணை: விக்கிரவாண்டி… திமுகவின் மலைக்க வைக்கும் டோட்டல் பட்ஜெட்!

காபி-டேபிள் புத்தகம் சமயபுரம் மாரியம்மன் கோவில் வெளியீடு:

மொத்தம் ரூ.125 கோடி… ரோகித் முதல் டிராவிட் வரை… யாருக்கு எவ்வளவு?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share