’அரபிக் குத்து’ பாடலுக்கு ஆட்டம் போட்ட தாத்தா: வைரலான வீடியோ!

Published On:

| By Minnambalam

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் வெளியான ’பீஸ்ட்’ திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருந்தார். படத்தில் இடம்பெற்ற பாடல்களும், பின்னணி இசையும் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

ADVERTISEMENT

குறிப்பாக இந்த படத்தில் சிவகார்த்திகேயன் எழுதி, அனிருத் இசையமைத்து பாடியிருந்த ‘அரபிக் குத்து ‘ பாடல் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்தது. இந்த பாடலுக்கு சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் நடனம் ஆடி வீடியோவை வெளியிட்டிருந்தனர்.

மேலும், இந்த பாடல் வெளியானதிலிருந்து தற்போது வரை வரவேற்பு குறையாமல் யூடியூபில் அதிகம் பார்வையாளர்களை கடந்து வருகிறது.

ADVERTISEMENT

இந்த பாடலுக்கு நடனமாடி இன்னும் பலரும் அதற்கான வீடியோக்களை தங்களுடைய சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு வருகிறார்கள். அந்த வகையில், தற்போது முதியவர் ஒருவர் தன்னுடைய வீட்டிற்குள் ‘அரபிக் குத்து’ பாடலை போட்டுக் கொண்டு நடனமாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தனது மனைவியிடம் ஜாலியாக விளையாடிக் கொண்டே அவர் ஆடும் நடனம் அனைவரையும் கவர்ந்துள்ளது. இதை பலரும் தங்களது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

ADVERTISEMENT

மு.வா.ஜெகதீஸ் குமார்

நடராஜர் கோயில் விவகாரம்: பதில் கடிதம் அனுப்பிய தீட்சிதர்கள்!

இம்ரான் கானை கொல்வதே இலக்கு: கைதான வாலிபர் வாக்குமூலம்!

Photo of author
Minnambalam
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share