PHOTOS: மலேசியாவில் களைகட்டிய விஜய்யின் ‘ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழா ஏற்பாடுகள்- குவிந்த நட்சத்திரங்கள்!

Published On:

| By Mathi

JanaNayagan Vijay Malaysia

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் ’ஜனநாயகன்’ திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா நாளை டிசம்பர் 27-ந் தேதி மலேசியாவில் நடைபெறுகிறது.

  • மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் உள்ள Bukit Jalil Stadium-ல் ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா நடைபெறுகிறது.
  • இந்த மைதானத்தில் சுமார் 85,000 பேர் அமர முடியும்.
  • இம்மைதானம் உலக அளவில் 15-வது; தெற்காசியாவில் 4-வது; ஆசியாவில் மிகப் பெரியது.
  • ஜனநாயகன் இசைவெளியீட்டு விழா நிகழ்ச்சி “Thalapathy thiruvizha” என்ற பெயரில் நடத்தப்படுகிறது.
  • இந்நிகழ்ச்சிக்கு மலேசியா அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
  • இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் எந்த ஒரு அரசியல் சார்பும் இருக்க கூடாது என்பது மலேசியா காவல்துறையின் மிக முக்கியமான கட்டுப்பாடு
  • கோலாலம்பூர் நெடுஞ்சாலைகளில் இந்நிகழ்ச்சிக்கான விளம்பர வீடியோ பதாகைகள் பிரம்மாண்டமாக வைக்கப்பட்டுள்ளன.
  • தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், நடிகர் பிரபு தேவா, இயக்குநர் நெல்சன், இசை அமைப்பாளர் அனிருத், நிகழ்ச்சி தொகுப்பாளர் ரியோ உள்ளிட்ட பலரும் கோலாலம்பூருக்கு வருகை தந்துள்ளனர்
  • மலேசியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சிங்கப்பூரில் இருந்தும் விஜய் ரசிகர்கள் கோலாலம்பூர் நோக்கி திரண்டுள்ளனர்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share