முகத்தை இயற்கையாகவே அழகாக்க கடலை மாவுடன் (Gram Flour) சில பொருட்களை மட்டும் சேர்த்து தடவினால் போதும்.
நம் முகத்தை அழகாக்க செயற்கையான க்ரீம்கள், பேஷ் வாஷ்கள் பயன்படுத்துவதை வழக்கமாக வைத்துள்ளோம். ஆனால், அது அப்போதைய நேரத்தில் முகத்தை பளபளப்பாக காட்டுகிறதே தவிர அதனால் சருமத்திற்கு பாதிப்புகள் ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளன. ஆனால், நமக்கு வீட்டில் இயற்கையாக கிடைக்கும் பொருட்களை வைத்தே நாம் சருமத்தை பிரகாசமாகவும், அழகாகவும் மாற்றலாம்.
கடலை மாவுவின் சரும நன்மைகள் (gram flour benefits for face):
கடலை மாவு என்பது நமது சருமத்திற்கு மிகுந்த நன்மை அளிப்பதாகவே உள்ளது. குறிப்பாக முகத்திற்கு அழகைக் கூட்ட கடலை மாவை முகத்தில் பூசிக்கொள்வது வழக்கம். கடலை மாவு சருமத்தில் இருக்கும் அழுக்கு, அசுத்தங்கள் மற்றும் அதிகப்படியான எண்ணெய்யை அகற்ற உதவுகிறது. சருமத்தின் ஆழமான துளைகளில் ஊடுருவி முகப்பருவைக் குறைத்து சருமத்தை தெளிவாக வைத்திருக்க உதவுகிறது. கடலை மாவுடன் இன்னும் சில பொருட்களை கலந்து பயன்படுத்துவது சருமத்திற்கு மேலும் நன்மை பயக்கிறது.
கடலை மாவு + தயிர் (gram flour + curd):
கடலை மாவு மற்றும் தயிரை கலந்து முகத்தில் தடவுவது சருமத்தை ஆழமாக சுத்தப்படுத்துகிறது. டானிங்கை அகற்றவும் உதவுகிறது. இந்த கலவை எண்ணெய் சருமத்திற்கு மிகவும் நன்மை அளிக்கிறது. இறந்த சரும செல்களை அகற்றி சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்க உதவுகிறது.
கடலை மாவு + மஞ்சள் (Gram flour + turmeric):
கடலை மாவுடன் மஞ்சளை சேர்த்து பேஸ்ட் செய்வது முகத்தில் உள்ள சுருக்கங்களை நீக்க உதவி புரிகிறது. இது முகத்திற்கு இயற்கையான பளபளப்பைத் தரும். கடலை மாவுடன் மஞ்சளை சேர்த்து முகத்தில் தடவினால் டானிங் நீங்கும்.
கடலை மாவு + பசும்பால் (Gram flour + milk):
கடலை மாவு மற்றும் பசும்பால் தடவுவது இயற்கையாக முகத்தை சுத்தப்படுத்துகிறது. இயற்கையான மாய்ஸ்சரைசராகவும் செயல்படுகிறது. இந்த கலவை இறந்த சரும செல்களை அகற்றவும், சருமத்தை பிரகாசமாக்கவும், கறைகள் மற்றும் முகப்பருவை குறைக்கவும் உதவுகிறது.
கடலை மாவு + எலுமிச்சை சாறு (Gram flour + lemon ):
கடலை மாவுடன் எலுமிச்சை சாறு சேர்த்து முகத்தில் தடவுவதால் எண்ணெய் பசை கட்டுப்படுத்தப்படுகிறது. டானிங்கை நீக்குவதோடு, முகப்பருவையும் குறைத்து பிரகாசமாக்க உதவுகிறது. இந்த இறந்த சரும செல்களை நிக்கி இயற்கையான பளபளப்பை ஏற்படுத்துகிறது.
