மார்பகத்தை அழுத்துவது பாலியல் குற்றமல்ல என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. grabbing breasts is not rape
உத்தரப் பிரதேச மாநிலம் கசகங்ச் பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுமி பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்கப்பட்டார்.
அந்த பகுதியைச் சேர்ந்த பவன் மற்றும் ஆகாஷ் இருவரும் அந்த சிறுமி அணிந்திருந்த பைஜாமாவின் (இரவு உடை) கயிற்றை அவிழ்த்து ஒரு கால்வாய் அருகே இழுத்துச் செல்ல முயன்றதாக கூறப்படுகிறது.
அப்போது அவ்வழியே சிலர் வந்ததால் அவர்களை பார்த்ததும் அந்த சிறுமியை விட்டுவிட்டு அவர்கள் தப்பி ஓடியிருக்கின்றனர்.
இதுதொடர்பான வழக்கு பாட்டியாலி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த விசாரணை நீதிமன்றம் ஐபிசி பிரிவு 376 (பாலியல் வன்கொடுமை), போக்சோ சட்டப்பிரிவு 18 கீழ் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து இருவரும் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை இன்று (மார்ச் 20) விசாரித்த நீதிபதி ராம் மனோகர் நாராயண் மிஸ்ரா, “குற்றம் சாட்டப்பட்ட பவன் மற்றும் ஆகாஷ் மீதான குற்றச்சாட்டு என்னவென்றால், அவர்கள் பாதிக்கப்பட்டவரின் மார்பகங்களைப் பிடித்தனர். பாதிக்கப்பட்டவரின் ஆடைகளை அவிழ்க்க முயன்றனர் என்பதுதான்.
பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய திட்டமிட்டனர் என்பதற்கான ஆதாரம் இல்லை.
எனவே சிறுமியின் மார்பகங்களை பிடித்து அழுத்துவதும் அவரின் பைஜாமா அவிழ்ப்பதும் பாலியல் வன்கொடுமை குற்றத்தின் கீழ் வராது” என்று கூறியுள்ளார்.
அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளை ஐபிசி பிரிவு 354-பி (ஆடையைப் பிடித்து தாக்குதல்) மற்றும் போக்சோ சட்டத்தின் பிரிவு 9/10 ஆகியவற்றின் கீழ் மாற்றி நீதிபதி உத்தரவிட்டார்.
மார்பகங்களை பிடித்து அழுத்துவது பாலியல் குற்றத்தின் கீழ் வராது என்று நீதிபதி கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
grabbing breasts is not rape