அரசு ஊழியர்களுக்கான மார்ச் மாத சம்பளம் தள்ளிப்போவதாக நமது மின்னம்பலம்.காம் தளத்தில் கடந்த 16ஆம் தேதி செய்தி வெளியிட்டிருந்தோம். govt employees salary delayed to april 2
அதில், தமிழக அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு மாதமும் அவர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் அந்த மாதத்தின் இறுதி நாளில் வழங்கப்பட்டு வருகிறது. அந்த நாள் விடுமுறை நாளாக வரும் பட்சத்தில், அதற்கு முந்தைய நாளில் சம்பளம் வழங்கப்படும்.
இந்த நிலையில் மார்ச் 2025 மாதத்துடன் தொடர்புடைய அனைத்து சம்பளம் மற்றும் ஓய்வூதியத் தொகை அனைத்தையும் அரசு ஊழியர்களுக்கு வரும் ஏப்ரல் 2ஆம் தேதி விடுவிக்க வேண்டும் என தமிழ்நாடு கருவூலம் மற்றும் கணக்குத்துறை இயக்குநர் சாரு ஸ்ரீ உத்தரவிட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஏன் தள்ளிப் போகிறது? govt employees salary delayed to april 2
இந்த நிலையில், தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், ”தமிழக அரசின் கீழ் பணிபுரியும் சுமார் 9.30 இலட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், 7.05 இலட்சம் ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள் ஆகியோரது மார்ச் மாதச் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் அல்லது குடும்ப ஓய்வூதியம் ஆகியவை இவ்வாண்டு ஏப்ரல் 1 அன்று வருடாந்திர கணக்கு முடிவு காரணமாக வங்கிகளுக்கு விடுமுறை என்பதால், பணியாளர் மற்றும் ஓய்வூதியர்களின் வங்கிக் கணக்கில் 02.04.2025 வரவு வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.