கிண்டி பன்னோக்கு அரசு மருத்துவமனையில் அரசு மருத்துவர் பாலாஜி கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தநிலையில், அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்க மாநில தலைவர் செந்தில் இன்று (நவம்பர் 13) தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் இன்று செந்தில் பேசியபோது, “மருத்துவர் பாலாஜி கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து எமெர்ஜென்சி, உயிர் காக்கும் மருத்துவப் பணிகள் தவிர்த்து அனைத்து மருத்துவ பணிகளையும் நிறுத்துவதற்கு தீர்மானம் போடப்பட்டுள்ளது. மருத்துவ மாணவர்களுக்கான வகுப்புகள் நிறுத்தப்படும். அவர்களையும் போராட்டத்தில் இணைய அழைப்பு விடுத்துள்ளோம்.
தனியார் மருத்துவர்களையும் போராட்டத்தில் ஈடுபட அழைப்பு விடுத்துள்ளோம். இதுதொடர்பாக, இன்று மாலை அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும். அரசு மருத்துவமனைகளில் ஒரு நாளைக்கு 5 லட்சம் பேர் சிகிச்சைக்காக வருகிறார்கள். 60 ஆயிரம் உள்நோயாளிகள் சிகிச்சை பெறுவதற்கான வசதிகள் இருக்கிறது.
இந்தசூழலில் அரசு மருத்துவமனைகளில் போதிய பாதுகாவலர்கள் இல்லாததால், மருத்துவர்கள் பாதுகாப்பற்ற தன்மையில் தான் வேலை செய்து வருகிறோம். மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் நான்கு முதல் ஐந்து போலீசார் தான் இருக்கிறார்கள். அவர்களும் ஆக்டிவாக இல்லை. மருத்துவர்களுக்கு ஏதாவது பிரச்சனை என்றால் அவர்கள் தடுக்க முற்படுவதில்லை. வரும்காலத்தில் இதை சரிசெய்ய வேண்டும்” என்றார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கேரக்டர் ரோல் கனவுகளோடு திரிந்த காலம் ; நாற்பதுக்கு மேல் சிக்சர்களாக விளாசும் எம்.எஸ்.பாஸ்கர்
மகேஸ்வரிகளால் ஆசிர்வதிக்கப்பட்டவை அரசுப்பள்ளிகள்- யோகஸ்ரீயால் புகழடைந்த ஆசிரியை!
