MICHAUNG புயல்: தென்றலாக மாறிய ஆளுநர் ரவி

Published On:

| By Aara

வங்கக் கடலில் உருவாகியுள்ள MICHAUNG புயல் சென்னையை ஒட்டி நிலை கொண்டிருப்பதால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் நேற்று இரவு முதல் கன மழை பெய்து கொண்டிருக்கிறது. இன்று இரவு வரை கன மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இந்த நிலையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று (டிசம்பர் 4) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் மத்திய மாநில அரசுகள் பாதுகாப்புப் பணியில் முழு அளவில் ஈடுபட்டிருப்பதாக கூறியுள்ளார்.

ஆளுநர் வெளியிட்டுள்ள செய்தியில், “புயல் காரணமாக நமது கிழக்குக் கடற்கரை மாவட்டங்களில் சில கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மக்களின் இயல்பு வாழ்வு முடங்கியுள்ளது. இந்த நிலையில், மத்திய, மாநில அரசுகளின் துறைகள் மக்களின் பாதுகாப்புக்கான பணிகளிலும் அத்தியாவசிய பணிகளிலும் முழுவீச்சில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மத்திய அரசும், மாநில அரசும் புயல், மழை நிலவரத்தை உச்சபட்சமாக கண்காணித்து வருகின்றன.

தமிழ்நாடு அரசின் அறிவுரையை ஏற்று மக்கள் வீட்டிலேயே பாதுகாக்க இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்று ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார்.’

தமிழ்நாடு அரசோடு நிர்வாக விஷயங்களில் மோதி அவ்வப்போது புயலைக் கிளப்பி வரும் ஆளுநர், இந்த புயல் விஷயத்தில் தென்றல் போன்ற அணுகுமுறையை கையாண்டுள்ளார் என்ற கருத்துகள்  வந்துகொண்டிருக்கின்றன.

வேந்தன்

மின்சாரம் எப்போது வரும்? – அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி!

CycloneMichaung புயல் எங்கே உள்ளது? எப்படி நகர்கிறது? சென்னை எப்போது தப்பிக்கும்?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share