சென்னை தொலைக்காட்சி நிலையத்தின் பொன்விழா கொண்டாட்டங்களுடன் இணைந்து ‘இந்தி மாதம்’ நிறைவு விழா சேப்பாக்கம் தூர்தர்ஷன் அலுவலகம் முன்பாக இன்று (அக்டோபர் 18) கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் ஆளுநர் ரவி கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. அப்போது, தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை பாடியவர்கள், “தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்” என்ற வரியை விடுத்துவிட்டு மற்ற வரிகளை மட்டும் பாடியதால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது,
ஏற்கனவே இந்தி மாதம் நிறைவு விழா நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து தூர்தர்ஷன் அலுவலகத்தின் முன்பு திமுக மாணவரணி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மேலும், இந்தி பேசாத மாநிலங்களில் ‘இந்தி மாதம்’ கொண்டாடப்படுவதைத் தவிர்க்கக்கோரி முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு!
வீரப்பன் நினைவு நாள்… 20 ஆண்டுகளில் மலைப்பகுதிகளில் நடந்த மாற்றம்!