மாநில அரசுக்கு ஆதரவு: ஆளுநர் ரவி உறுதி!

By Minnambalam

|

Published on 30 Dec 2023, 8:06 PM

இந்திய அரசியலமைப்பின் வரம்புக்கு உட்பட்டு மாநில அரசுக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாக ஆளுநர் ரவி முதல்வர் ஸ்டாலினிடம் இன்று (டிசம்பர் 30) உறுதியளித்துள்ளார்.

நிலுவையில் உள்ள மசோதா விவகாரத்தில் முதல்வரிடம் ஆளுநர் கலந்தாலோசித்து தீர்வு காண வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.

ADVERTISEMENT

உச்சநீதிமன்ற அறிவுறுத்தலை தொடர்ந்து ஆளுநர் ரவி முதல்வர் ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்திருந்தார். ஆளுநரின் அழைப்பை ஏற்று சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், ராஜகண்ணப்பன், ரகுபதி, தங்கம் தென்னரசு ஆகியோர் இன்று சென்றிருந்தனர்.

இந்த சந்திப்பின்போது நிலுவையிலுள்ள மசோதாக்கள் மற்றும் கோப்புகளுக்கு விரைந்து ஒப்புதல் அளிக்க  வலியுறுத்தி ஆளுநரிடம் முதல்வர் ஸ்டாலின் மனு அளித்தார்.

ADVERTISEMENT

இந்தநிலையில், முதல்வர் ஸ்டாலின் உடனான சந்திப்பு சுமூகமாக அமைந்ததாக ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “ஆளுநர் ஆர்.என். ரவி முதல்வர் ஸ்டாலினை மாநில அரசு விவகாரங்கள் தொடர்பாக விவாதிக்கும் சந்திப்புக்கு அழைத்திருந்தார்.

ADVERTISEMENT

அதன்படி, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் முதல்வர் ஸ்டாலின் ஆளுநர் ரவியை இன்று (டிசம்பர் 30) மாலை 5.30 மணியளவில் சந்தித்தார்.

இந்த சந்திப்பின் போது, முதலமைச்சருடன் அமைச்சர்கள் துரைமுருகன், ராஜகண்ணப்பன், ரகுபதி, தங்கம் தென்னரசு மற்றும் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, முதலமைச்சரின் முதன்மைச் செயலாளர், தமிழ்நாடு பொதுத்துறை செயலாளர் ஆகியோரும் வந்திருந்தனர்.

இந்த சந்திப்பு சுமூகமாக இருந்தது. ஆளுநர் ஆர்.என்.ரவியும் முதல்வர் ஸ்டாலினும் பரஸ்பரம் மரியாதையை பரிமாறிக் கொண்டு, மாநிலம் தொடர்பான பல்வேறு பிரச்சனைகள் குறித்து தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

ஆளுநர் ரவி தமிழ்நாட்டு மக்களின் நலனில் தாம் முழு ஈடுபாட்டைக் கொண்டிருப்பதாக மீண்டும் வலியுறுத்தினார். இந்திய அரசியலமைப்பின் வரம்புக்கு உட்பட்டு மாநில அரசுக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாகவும் அவர் உறுதியளித்தார்.

மாநிலத்தின் மிகப்பெரிய நலனை கருத்தில் கொண்டு முதலமைச்சர் ஸ்டாலினுடன் அவ்வப்போது சந்திப்புகள் நடைபெற வேண்டிய அவசியத்தையும் ஆளுநர் ரவி வலியுறுத்தினார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

புத்தாண்டு கொண்டாட்டம் : போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் வரும் சென்னை!

ஆளுநர் – முதல்வர் சந்திப்பில் நடந்தது என்ன? – அமைச்சர் ரகுபதி பேட்டி!

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Minnambalam

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel