தமிழக நெடுஞ்சாலை ஆணையத்துக்கு ஆளுநர் ரவி ஒப்புதல்!

Published On:

| By Kavi

தமிழக நெடுஞ்சாலை ஆணைய சட்ட முன்வடிவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.

கடந்த பிப்ரவரி 21ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் பொதுப்பணிகள் மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலு தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை ஆணையத்தை நிறுவுவதற்கான சட்ட முன்வடிவை கொண்டுவந்தார்.

நெடுஞ்சாலைகள் பராமரிப்பு, தரம் உயர்த்த உடனடி, நீ்ண்டகால திட்டம் தயாரித்தல், பன்னாட்டு நிதியைக் கொண்டுவருவதற்கான மாதிரிகளை உருவாக்குவது இந்த ஆணையத்தின் பணியாக குறிப்பிடப்பட்டது. இந்த ஆணையத்துக்கு ஒரு தலைவர், 3 முழுநேரம், 3 பகுதிநேர உறுப்பினர்கள் நியமிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த சட்ட முன்வடிவு ஆளுநரின் ஒப்புதலுக்காக கடந்த பிப்ரவரி 22ஆம் தேதி அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று ஒப்புதல் அளித்துள்ளார்.
இதையடுத்து, மாநில நெடுஞ்சாலைகள் ஆணையம் பொது மற்றும் தனியார் துறை பங்களிப்பில் நிறுவப்பட உள்ளது.

விரைவில் ஆணையத்துக்கான தலைவர், உறுப்பினர்கள் நியமிக்கப்படவுள்ளார்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….

பிரியா

மார்கழி மாத நட்சத்திர பலன்கள்: ரோகிணி!

திருமாவளவனுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை : அமைச்சர் எ.வ.வேலு

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share