உத்தரப் பிரதேசத்தில் நடைபெறும் மகா கும்பமேளாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று (பிப்ரவரி 22) புனித நீராடினார். Governor Ravi Annamalai takes holy dip
உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கடந்த ஜனவரி 13ஆம் தேதி முதல் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. வருகிற பிப்ரவரி 26 ஆம் தேதி வரை இந்த விழா கொண்டாடப்பட உள்ளது.
குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள், ராஷ்மிகா மந்தானா உள்ளிட்ட திரைபிரபலங்கள் என ஏராளமானோர் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர்.
இந்த சூழலில், பிரயாக்ராஜில் கங்கை யமுனை நதி நீரில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு செய்து தூய்மை குறித்து அறிக்கை தாக்கல் செய்தது.
அதில் கங்கை யமுனை நதி நீரில் நிர்ணயிக்கப்பட்ட தரத்தை விட பல மடங்கு அதிகமான குவாலிஃபாம் பாக்டீரியாக்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனினும் ஆன்மீக நம்பிக்கை கொண்ட பலரும் தொடர்ந்து திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர்.
இந்த நிகழ்வுக்கு இன்னும் நான்கு தினங்களே இருக்கும் நிலையில் கூட்டமும் அதிகரித்து வருகிறது.
இந்த சூழலில் தமிழ்நாடு ஆளுநர் ரவி இன்று புனித நீராடினார்.
60 கோடி சனாதனிகள் Governor Ravi Annamalai takes holy dip
இது குறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், “பாரதம் மற்றும் உலகம் முழுவதிலும் இருந்து வந்த எண்ணற்ற கோடிக்கணக்கான ஹிந்துக்களுடன் சேர்ந்து, பிரயாக்ராஜின் புண்ணிய தீர்த்தமான திவ்ய, பவ்ய மகாகும்பத்தில் புனித நீராடி, தமிழ்நாட்டின் சகோதர, சகோதரிகளின் நல்வாழ்வுக்காகவும், நமது மாபெரும் தேசமான பாரதத்தின் இணக்கமான வளத்துக்காகவும் வேண்டி வழிபட்டேன்.
இங்கு காற்றில் பரவியுள்ள தீவிரமான நேர்மறை சக்தி அனைவரையும் ஆழமாகத் தொட்டு, மற்றவர்களுடன் இணைக்கிறது. சுமார் 60 கோடி சனாதனிகள் ஏற்கெனவே புனித நீராடிய இந்த தனித்துவமான மற்றும் பிரம்மாண்டமான சனாதன தர்ம விழா, மறுமலர்ச்சியடைந்த ஒரே பாரதம் உன்னத பாரதத்தின் உறுதியான சான்றாகும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் இன்று புனித நீராடியுள்ளார்.
இதுகுறித்து அவர், “உலகின் மிகப்பெரிய ஆன்மீகக் கூட்டமான மகா கும்பமேளாவில் பங்கேற்க கிடைத்த பாக்கியம்” என்று பதிவிட்டுள்ளார். Governor Ravi Annamalai takes holy dip