குடியரசு தின விழா கொண்டாட்டம்: ஆளுநர் ஆர்.என்.ரவி கொடியேற்றினார்.

Published On:

| By Pandeeswari Gurusamy

நாட்டின் 77ஆவது குடியரசு தினம் இன்று  உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னையில் மெரினா கடற்கரை பகுதியில் நடந்த பிரம்மாண்ட விழாவில் ஆளுநர் ஆர்.என். ரவி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். குடியரசு தின விழாவில் ஆளுநர் ஆர்.என். ரவி இந்த ஆண்டு ஐந்தாவது முறையாக தேசியக் கொடியை ஏற்றியுள்ளார்.

கொடியேற்றத்திற்குப் பின் விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் மலர்கள் தூவப்பட்டன. இதைத் தொடர்ந்து ஒருங்கிணைந்த படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஆளுநர் ஏற்றுக்கொண்டார். முன்னதாக, நிகழ்ச்சியில் பங்கேற்க வருகை தந்த ஆளுநரை முதல்வர் மு.க. ஸ்டாலின் வரவேற்றார். நிகழ்வில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், நீதிபதிகள், அமைச்சர்கள், அரசு செயலர்கள், காவல்துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.கொடியேற்றத்தைத் தொடர்ந்து மெரினா கடற்கரையைச் சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதோடு, அப்பகுதியில் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

நாட்டின் 77ஆவது குடியரசு தினம் இன்று நாடு முழுவதும் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னையில் ஆளுநர் ஆர்.என். ரவி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். குடியரசு தின விழாவில் ஆளுநர் ஆர்.என். ரவி இந்த ஆண்டு ஐந்தாவது முறையாக தேசியக் கொடியை ஏற்றியுள்ளார். கொடியேற்றத்திற்குப் பின் விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் மலர்கள் தூவப்பட்டன. அப்போது தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

முன்னதாக, நிகழ்ச்சியில் பங்கேற்க வருகை தந்த ஆளுநரை முதல்வர் மு.க. ஸ்டாலின் வரவேற்றார். நிகழ்வில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், நீதிபதிகள், அமைச்சர்கள், அரசு செயலர்கள், காவல்துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கொடியேற்றிய பின்னர் முப்படையினர் அணிவகுத்து ஆளுநருக்கு மரியாதை செலுத்தினர்.

ADVERTISEMENT

அதன்பின்னர் அணி வகுப்பு மேடைக்கு வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதக்கங்களை வழங்கினார். வீரதீரச் செயலுக்கான அண்ணா பதக்கம், கோட்டை அமீர், மத நல்லிணக்கப் பதக்கம், சி.நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தி திறனுக்கான விருது, காந்தியடிகள் காவலர் பதக்கங்கள், சிறந்த போலீஸ் நிலையத்திற்கான கோப்பைகள் ஆகியவற்றை உரியவர்களுக்கு முதல்-அமைச்சர் வழங்கினார்.

அதைத்தொடர்ந்து அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு நடைபெற்றது. செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறையின் மங்கள இசை ஊர்தி உள்பட பல்வேறு அரசுத் துறைகளின் ஊர்திகள், அரசின் நலத்திட்டங்களை விவரிக்கும் வகையிலான வடிவமைப்புகளுடன் கம்பீரமாக வலம் வந்தது.

ADVERTISEMENT

முன்னதாக, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் பாரம்பரிய நாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

கொடியேற்றத்தைத் தொடர்ந்து மெரினா கடற்கரையைச் சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதோடு, அப்பகுதியில் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share