கடந்த 2016 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் 2019 ஆம் ஆண்டு பொது தேர்தல் மற்றும் 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது, தேர்தல் வாக்குறுதியாக திமுக தலைவர் ஸ்டாலின் புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்துவோம்.ஆண்டுக்கு 15 நாட்கள் விடுப்பு சரண்டர் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவோம். பணி கொடை வழங்குவது போன்ற பல வாக்குறுதிகளை அரசு ஊழியர்களுக்கு அளித்திருந்தார். government staff protest
ஆனால், அந்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை என்று கூறி அரசு ஊழியர்கள் ,ஆசிரியர்கள் , ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொடர்ந்து, பிப்ரவரி 25 ஆம் தேதி அனைத்து சங்கம் தரப்பிலும் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்திருந்தனர். இதையடுத்து, பிப்ரவரி 24 ஆம் தேதி அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் 32 பேரை தலைமை செயலகத்துக்கு அழைத்து பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ .வேலு , கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் , சமூகநலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அன்றைய தினம் காலையில் முதல் கட்டமாக 2 மணி நேரம் பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது, அரசு ஊழியர்களின் கோரிக்கையை நிதானமாகவும், கவனமாகவும் அமைச்சர்கள் கேட்டனர். பின்னர், உங்கள் கோரிக்கைகளை முதல்வர் கவனத்துக்கு எடுத்து சென்று, உங்களுக்கு நல்ல பதில் சொல்கிறோம். மாலை 7 மணிக்கு மீண்டும் சந்திப்போம் என்று அரசு ஊழியர்கள் சங்க நிர்வாகிகளிடத்தில் இருந்து அமைச்சர்கள் விடை பெற்றனர்.government staff protest
தொடர்ந்து, முதல்வரை சந்தித்த அமைச்சர்கள் மீண்டும் மாலை 7 மணிக்கு அரசு ஊழியர்கள் சங்க பிரதிநிதிகளை சந்தித்தனர். அப்போது அமைச்சர் எ.வ.வேலு உங்கள் கோரிக்கைகளை முதல்வர் பரீசிலிப்பதாக கூறியுள்ளார். இன்னும், 4 வார காலம் மட்டும் அவகாசம் கேட்டுள்ளார். அது வரையில், உங்கள் போராட்டத்தை கைவிடுங்கள் என்று கேட்டுக் கொண்டார்.
பேச்சுவார்த்தையில் இருந்த அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் , 4 வாரம் அல்ல 4 ஆண்டுகள் கால அவகாசம் கொடுத்தாகி விட்டது. இனியும், கால அவகாசமா? என கேட்டபடி பேச்சுவார்த்தையில் இருந்து வெளியேறினர்.
இதற்கிடையே , உயர்நீதிமன்றம் அரசு ஊழியர்களின் போராட்டத்துக்கு தடை விதித்தது. ஆனால், அரசு ஊழியர்கள் தடையை மீறி ,திட்டமிட்டப்படி பிப்ரவரி 25 ஆம் தேதி மாநிலம் முழுவதும் தற்செயல் விடுப்பு போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இதனால், அரசு அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டது. அரசு அலுவலக பணிகளும் பாதிக்கப்பட்டது.government staff protest
இந்த நிலையில்,மார்ச் 14 ஆம் தேதி தமிழக சட்டமன்ற கூட்ட தொடர் நடைபெறவுள்ளது. அப்போது, அரசு ஊழியர்கள் சங்கம், அரசு ஊழியர் சங்கம், புதிய பென்சன் ஒழிப்பு கூட்டமைப்பு ,ஜாக்டோ ஜியோ போன்ற அமைப்புகள் மாநிலம் முழுவதும் போராட்டத்தை தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளன. சட்டமன்றத்துக்கு வெளியேவும் போராட்டம் நடத்த ஆலோசித்து வருகிறது.
அரசு ஊழியர்களின் இந்த போராட்டம் அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 2026ல் திமுக ஏமாறும் என்று கூறியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.