ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் பண்டிகை கால முன்பணத்தை உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. Government decree increases festive advance payment
தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி சட்டப்பேரவையில் அரசு ஊழியர்களுக்காக 9 அறிவிப்புகளை வெளியிட்டார்.
அதில் ஓய்வூதியர்களுக்கான பண்டிகை கால முன்பணம் ரூ.4 ஆயிரத்தில் இருந்து ரூ.6 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.
ஓய்வூதியதாரர்களுக்கு தமிழ்நாடு அரசால் ஆண்டுதோறும் வழங்கப்படும் பரிசுத் தொகை ரூ.500ல் இருந்து ரூ.1000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியானது.
இந்நிலையில் அதற்கான அரசாணை இன்று (ஜூன் 4) வெளியிடப்பட்டது.
அதில், “தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு முன்னாள் கிராம பணியமைப்பு உட்பட “C” மற்றும் “D” பிரிவு ஓய்வூதியதாரர்கள். அனைத்து வகை தனி ஓய்வூதியதாரர்கள் மற்றும் அனைத்துக் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு தமிழ்நாடு அரசால் ஆண்டுதோறும் வழங்கப்படும் பரிசுத் தொகை 500 ரூபாயிலிருந்து 1000 ரூபாயாக இனி உயர்த்தி வழங்கப்படும்.

இந்த உயர்வால் சுமார் நான்கு லட்சத்து எழுபத்து ஓராயிரம் ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள். இதனால் அரசிற்கு ஏற்படும் கூடுதல் செலவினம் சுமார் 24 கோடி ரூபாயாக இருக்கும்.”
முன்னாள் கிராம பணியமைப்பு உட்பட “C” மற்றும் “D” பிரிவு ஓய்வூதியதாரர்கள். அனைத்து வகை ஓய்வூதியதாரர்கள் மற்றும் அனைத்து குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் பண்டிகை பரிசுத்தொகை 500 ரூபாயிலிருந்து 1000 ரூபாயாக உயர்த்தி வழங்கி அரசு ஆணையிடுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. Government decree increases festive advance payment