ADVERTISEMENT

சுங்கச்சாவடிகளில் அரசு பேருந்துகளுக்கு தடை : நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அதிரடி உத்தரவு!

Published On:

| By Kavi

Government buses banned from toll booths

தென் மாவட்ட நெடுஞ்சாலையில் உள்ள நான்கு சுங்கச்சாவடிகளில் அரசு பேருந்துகளை அனுமதிக்க கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. Government buses banned from toll booths

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் சுங்கச்சாவடிக்கு செலுத்த வேண்டிய தொகை 276 கோடி ரூபாயை செலுத்தாமல் நிலுவையில் வைத்துள்ளதாக மதுரை கப்பலூர், சாத்தூர், எட்டுர்வட்டம், கயத்தாறு, சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி சுங்கச்சாவடிகளை நிர்வாகிக்கும் தனியார் நிறுவனங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. 

ADVERTISEMENT

அந்த மனுவில், “சுங்கச்சாவடிகளுக்கு அரசு போக்குவரத்து கழகம் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை விரைந்து வழங்க உத்தரவிட வேண்டும்” என்று கோரப்பட்டிருந்தது. 

இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் இன்று (ஜூலை 8) விசாரணைக்கு வந்தது. 

ADVERTISEMENT

வழக்கை விசாரித்த நீதிபதி, கப்பலூர், எட்டுர்வட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி சுங்கச்சாவடிகள் வழியாக வரும் 10ஆம் தேதி முதல் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பேருந்துகளை இயக்க அனுமதிக்க கூடாது என்று உத்தரவு பிறப்பித்தார். 

இந்த சுங்கச்சாவடியில் அசம்பாவிதங்கள் நடக்காமல் தடுக்க உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட காவல்துறை கண்காணிப்பாளர்களுக்கு டிஜிபி உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று தனது உத்தரவில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்தார். Government buses banned from toll booths

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share