’ஒத்த ஓட்டு முத்தையா’: கவுண்டமணி ரீ என்ட்ரி!

Published On:

| By Jegadeesh

Goundamani returns as hero in new movie

ஷஷி பிலிம்ஸ் தயாரிப்பில் சாய் ராஜகோபாலின் எழுத்து மற்றும் இயக்கத்தில் கவுண்டமணி கதையின் நாயகனாக நடிக்கும் முழு நீள நகைச்சுவை திரைப்படத்திற்கு ‘ஒத்த ஓட்டு முத்தையா’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

ஒட்டு மொத்த குடும்பத்துடன் கண்டு ரசிக்கக் கூடிய வகையில் உருவாகவுள்ள இப்படத்தில் யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், தம்பி ராமையா, மாரிமுத்து, சிங்கம் புலி, ரவிமரியா, வையாபுரி, முத்துக்காளை, ‘எதிர்நீச்சல்’ ஜான்சி ராணி, தாரணி, கூல் சுரேஷ், சென்றாயன், லேகா ஶ்ரீ, டி கே ஶ்ரீநிவாசன், சதீஷ் உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளம் களம் இறங்குகிறது.

மேலும், நடிகர் சிங்கமுத்து மகன் வாசன் கார்த்திக், மறைந்த நடிகர் நாகேஷின் பேரன் கஜேஷ், மற்றும் நடிகர் மயில்சாமி மகன் அன்பு மயில்சாமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, இவர்களுக்கு ஜோடியாக மூன்று இளம் நடிகைகள் நடிக்க உள்ளனர். கவுண்டமணி ஜோடியாக ராஜேஸ்வரி நடிக்கிறார்.

Goundamani returns as hero in new movie

படம் குறித்து பேசிய இயக்குநர் சாய் ராஜகோபால், “சுமார் 70 படங்களில் கவுண்டமணி மற்றும் செந்திலுக்கான நகைச்சுவை பகுதியை எழுதியதோடு, பல்வேறு படங்களில் உதவி, துணை மற்றும் இணை இயக்குநராக நான் பணியாற்றி உள்ளேன். மணிவாசகம், அர்ஜுன், டி பி கஜேந்திரன் உள்ளிட்டோர் உடன் பணியாற்றி உள்ளேன். எனது 25 ஆண்டு கால திரையுலக பயணத்தில், பாண்டியராஜன், ஈஸ்வரி ராவ் நடிப்பில் ‘சுந்தரி நீயும் சுந்தரன் நானும்’, ‘பாய்ஸ்’ மணிகண்டன் மற்றும் சிம்ரன் நடிப்பில் ‘கிச்சா வயசு 16’ ஆகிய படங்களை இயக்கி உள்ளேன்.

‘ஒத்த ஓட்டு முத்தையா’ படத்தின் கதையை கவுண்டமணி அவர்களிடம் சொன்னபோது மிகவும் மகிழ்ச்சி தெரிவித்ததோடு நடிப்பதற்கும் உடனே சம்மதம் தெரிவித்தார். ஆறு முதல் 60 வரை அனைத்து வயதினரும் ரசிக்கக்கூடிய அரசியல் கலந்த முழுநீள நகைச்சுவை திரைப்படமாக இது இருக்கும்” என்றார்.

இராமானுஜம்

மணிப்பூர் விவகாரம்: நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு!

IRCTC இணையதளம் முடக்கம்: ரயில்வே அட்வைஸ்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share