சினி கிராப்ட் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் சாய் ராஜகோபால் இயக்கத்தில், கதையின் நாயகர்களாக கவுண்டமணி மற்றும் யோகி பாபு நடித்து வரும் ‘ஒத்த ஓட்டு முத்தையா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசியலில் ஏற்படும் பிரச்சனைகளையும், குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகளையும் கவுண்டமணி எப்படி சாமார்த்தியமாக சமாளிக்கிறார்? என்பதை இயக்குநர் சாய் ராஜகோபால் அவர்கள் குடும்பத்துடன் கண்டுகளிக்கும் வகையில் முழு நீள நகைச்சுவை திரைப்படமாக இயக்கி இருக்கிறார்.
கடந்த மூன்று மாதங்களாக நடந்து வந்த ‘ஒத்த ஓட்டு முத்தையா’ படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. இதில் கவுண்டமணி, யோகி பாபுவுடன் இணைந்து சித்ரா லட்சுமணன், மொட்டை ராஜேந்திரன்,ரவிமரியா, ஓ ஏ கே சுந்தர், C.ரங்கநாதன் என தமிழ் சினிமாவின் பிரபல நடிகர், நடிகைகள் பலரும் நடித்துள்ளனர்.
கவுண்டமணி-யோகிபாபு நடிப்பில் உருவாகியுள்ள ‘ஒத்த ஓட்டு’ திரைப்படம் விரைவில் திரையரங்கிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-ராமானுஜம்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தமிழ்நாடு பட்ஜெட் : கல்லூரி மாணவர்களுக்கும் இனி 1,000 ரூபாய்!
மக்கள் இயக்கம் To வெற்றிக் கழகம்: விஜயகாந்தை பின்தொடரும் விஜய்