டிஎன்பிஎஸ்சிக்கு புதிய செயலாளர்!

Published On:

| By Kavi

டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு புதிய செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.

அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப, குரூப் 1 முதல் குரூப் 8 வரையிலான தேர்வுகளும், இதர துறை சார்ந்த தேர்வுகளையும் டிஎன்பிஎஸ்சி நடத்தி வருகிறது.

ADVERTISEMENT

இதன் தலைவர் பதவி கடந்த ஓராண்டுக்கும் மேலாக காலியாக இருக்கிறது. டிஎன்பிஎஸ்சி தலைவர் நியமனத்தில் அரசு மற்றும் ஆளுநருக்கு இடையே இழுபறி நீடித்து வருகிறது.

கடந்த நவம்பர் 29ஆம் தேதி டி.என்.பி.எஸ்.சி செயலாளராக இருந்த உமா மகேஸ்வரி ஐஏஎஸ் இடமாற்றம் செய்யப்பட்டார்.  புதிய செயலாளர் யார் என்று அப்போது அறிவிக்கப்படவில்லை.

ADVERTISEMENT

இந்தநிலையில், இன்று (டிசம்பர் 6) புதிய செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.

Image

தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் மற்றும் செயலாளர்(பொறுப்பு) அஜய் யாதவ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் புதிய செயலாளராக ச.கோபால சுந்தர ராஜ்  ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

தென்காசி ஆட்சியர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளைக் கோபால சுந்தர ராஜ் வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரியா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share