ஐபோன் 15 மாடல்களுக்கு போட்டியாக களமிறங்கும் கூகுள் பிக்சல் 8 சீரிஸ்!

Published On:

| By Jegadeesh

Google Pixel 8 series to compete with iPhone 15

கூகுள் வாடிக்கையாளர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ‘கூகுள் பிக்சல் 8’ மற்றும் ’பிக்சல் 8 ப்ரோ’ போன்களை வரும் அக்டோபர் 4-ம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது கூகுள் நிறுவனம்.

குறிப்பாக ஐபோன் 15 மாடல்களுக்கு போட்டியாக இந்த கூகுள் பிக்சல் 8 சீரிஸ் வெளிவர இருக்கிறது. அதேபோல் கூகுள் பிக்சல் 8 போன்கள் தனித்துவமான அம்சங்களைக் கொண்டுள்ளது. மேலும் 91mobiles பக்கத்தில் நேற்று  வெளியான தகவல்களின்படி கூகுள் பிக்சல் 8 ப்ரோ போன்களின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.

கூகுள் பிக்சல் 8 ப்ரோ (Google Pixel 8 Pro) ஸ்மார்ட்போன் ஆனது 6.7-இன்ச் QHD+ பிளஸ் எல்டிஒபி ஒஎல்இடி (LTPO OLED) டிஸ்பிளே வசதியைக் கொண்டு அறிமுகமாகும். பின்பு 2960 x 1440 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாகக் கொண்டு வெளிவரும் இந்த பிக்சல் போன். குறிப்பாக இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

Google Pixel 8 series to compete with iPhone 15

கூகுள் டென்சார் ஜி3 (Google Tensor G3) சிப்செட் உடன் இந்த புத்தம் புதிய கூகுள் பிக்சல் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே கேமிங், வீடியோ எடிட்டிங் போன்ற பயன்களுக்கு இந்த ஸ்மார்ட்போன் மிகவும் அருமையாகப் பயன்படும்.

இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும் 12ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவுடன் இந்த கூகுள் பிக்சல் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளிவரும்.

பின்பு இந்த போனில் பல்வேறு புதிய அம்சங்களும் இடம்பெறும்.

அதேபோல் ஆண்ட்ராய்டு 14 இயங்குதள வசதியுடன் இந்த புத்தம் புதிய கூகுள் பிக்சல் 8 ப்ரோ போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

50எம்பி பிரைமரி சென்சார் + 64எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ் + 48எம்பி டெலிபோட்டோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் இந்த கூகுள் பிக்சல் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். எனவே இந்த ஸ்மார்ட்போனின் உதவியுடன் இரவு நேரங்களிலும் கூட துல்லியமான வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுக்க முடியும்.

செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 11எம்பி கேமராவுடன் இந்த புதிய கூகுள் பிக்சல் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும்.

Google Pixel 8 series to compete with iPhone 15

இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த கூகுள் பிக்சல் 8 ப்ரோ ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த போன் தரமான மென்பொருள் வசதி மற்றும் அருமையான கேமராக்களுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

4950எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் இந்த கூகுள் பிக்சல் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். இந்த போனில் 27 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, அல்ட்ராசோனிக் கைரேகை சென்சார் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்கள் உள்ளன. குறிப்பாக இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும்.

Google Pixel 8 series to compete with iPhone 15

பிளாக் (Black), வைட் (White) மற்றும் ப்ளூ (Blue) ஆகிய கலர்களில் வெளிவரும் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

அதேபோல் 5ஜி, 4ஜி வோல்ட்இ, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த கூகுள் பிக்சல் 8 ப்ரோ போன் வெளிவரும். மேலும் கூகுள் பிக்சல் 8 போன்களுடன் கூகுள் பிக்சல் வாட்ச் 2 மாடலும் அறிமுகம் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

தீண்டாமை வன்கொடுமை: என்ன செய்துவிட முடியும் ஆசிரியர்கள்?

ஸ்மார்ட் வாட்ச்சுக்கு Bye! ஸ்மார்ட் ரிங்குக்கு Hi…

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share