உலகம் முழுவதும் நேற்றைய முட்டாள்கள் தினம் கேலி, கிண்டல்களால் நிரம்பிய நிலையில், வாடிக்கையாளர்களை ஏப்ரல் ஃபூல் செய்வதற்காக செய்த ஒரு காரியம், பலரை கதறியழ வைத்துள்ளது.
முட்டாள்கள் தினத்தை சிறப்பிப்பதற்காக சிறப்பாக யோசித்த கூகுள் நேற்று, ஒரு புதிய வசதியை அறிமுகப்படுத்தியது. இதற்காக, வழக்கமாக மெயில் பாக்சில் இருக்கும் சென்ட் பட்டனுக்கு அருகிலேயே சென்ட்+ மைக் டிராப் என்ற புதிய பட்டனைக் கொடுத்திருந்தது. இந்த பட்டன்மூலமாக மெயில் அனுப்பினால் யாருக்கு மெயில் செய்தோமோ அவருக்கு ஒரு அனிமேஷன் மினியன் அனுப்பப்படும். மேலும், அவர்களிடமிருந்து வரும் மெயில் இன்பாக்சுக்கு வராமல் ஆல் மெயில்ஸ் பிரிவில் கிடக்கும். இதனால் பலருக்கும் சிரமம் ஏற்பட்டது. பலர், இதனால் தங்கள் வேலைக்கே பிரச்சினை ஏற்பட்டதாகவும் வேலை தேடிவந்த சிலர் இந்த வசதியால் கடுப்பாகி ட்விட்டரில் கூகுளை கரித்துக்கொட்ட வழக்கம்போல் கிளைமாக்சில் கூகுள் மன்னிப்புக் கேட்டது.