ஓட்டுநர் இல்லாமல் 100 கி.மீ வேகத்தில் 70 கி.மீ சென்ற ரயில்!

Published On:

| By christopher

ரயிலில் ஹேண்ட் பிரேக் போடாமல் டிரைவர் இறங்கியதால் சரக்கு ரயில் ஒன்று 100 கிலோமீட்டர் வேகத்தில் 70 கிலோமீட்டர் தூரம் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இது சம்பந்தமான வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

பஞ்சாப் மாநிலத்தில் இருந்து காஷ்மீருக்கு சரக்கு ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த ரயில் பதன்கோட் ரயில் நிலையத்துக்கு வந்து நின்றதும் டிரைவர் வண்டியில் இருந்து இறங்கி சென்றார். அவர் ரயிலினை ஹேண்ட் பிரேக் போட்டு நிரந்தரமாக நிறுத்தி வைக்காமல் இறங்கிச் சென்றிருக்கிறார்.

ரயில் சற்று இறக்கமான இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்ததால் டிரைவர் சென்றவுடன் ரயில் மெதுவாக நகர ஆரம்பித்தது. ரயில் அப்படியே படிப்படியாக வேகம் எடுத்தது. ரயில் ஒரு கட்டத்தில் 100 கிலோமீட்டர் வேகத்தில் செல்ல ஆரம்பித்தது. உடனே அந்த ரயில் செல்லும் வழித்தடத்தில் இருந்த அனைத்து ரயில் நிலையங்களும் உஷார்படுத்தப்பட்டது.

ரயிலில் 53 பெட்டிகள் இருந்தது. தண்டவாளத்தை யாரும் கடக்காத வண்ணம் அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தனர். ரயில் ஐந்து ரயில் நிலையங்களை கடந்து சென்றது. இறுதியில் ரயில் தண்டவாளத்தில் மரத்தடுப்புகளை அமைத்து அதிகாரிகள் ரயிலை நிறுத்தினர். இச்சம்பவத்தில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. ஆனால் கடும் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது. சரக்கு ரயில் டிரைவர் இல்லாமல் ஓடிய வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாக பரவியது.

இது போன்ற சம்பவம் எதிர்காலத்தில் நடக்காமல் இருக்க தக்கமுன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். ரயில் டிரைவர் இல்லாமல் சென்ற சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராஜ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஹெல்த் டிப்ஸ்: முடி உதிர்வைத் தடுக்கும் உணவுகள்!

அ.இ.அ.தி.மு.க தேர்தல் முழக்கமும், அரசியல் குழப்பமும்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

கிச்சன் கீர்த்தனா : கறுப்பு உளுந்து உருண்டை

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share