திருவள்ளூர் அருகே இன்று காலை சரக்கு ரயில் தீ பிடித்து விபத்துக்குள்ளானது. சுமார் 7 மணி நேரத்திற்கு மேலாக போராடி தீ அணைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த வழித்தடத்தில் செல்லும் ரயில்களில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. Train Timings Altered
சென்னை சென்ட்ரலில் இருந்து இன்று இரவு 10 மணிக்கு கோவை கிளம்பும் கோவை எக்ஸ்பிரஸ் ரயில் (No.12673) அரக்கோணத்தில் இருந்து கிளம்பும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை சென்ட்ரலில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரயில் (No.12623) இரவு 7.30 மணிக்கு அரக்கோணத்தில் இருந்து கிளம்பும்.
சென்னை சென்ட்ரலில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் (No.12671)இரவு 9.05 மணிக்கு காட்பாடியில் இருந்து கிளம்பும்.
சென்னை சென்ட்ரலில் இருந்து அசோகபுரம் செல்லும் காவேரி எக்ஸ்பிரஸ் ரயில் (No.16021) இரவு 9.15 மணிக்கு அரக்கோணத்திலிருந்து கிளம்பும்.
மங்களூரில் இருந்து சென்னை சென்ட்ரல் வரும் வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் (No.22638)ரேணிகுண்டா – கூடூர் வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படுகிறது. இப்படி வரும் ரயில் திருத்தணியில் நின்று செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எர்ணாகுளம் தாடா நகர் எக்ஸ்பிரஸ் ரயில் (No.18190) மேல் பாக்கம், ரேணிகுண்டா, கூடூர் வழியாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வரும். இந்த ரயில் திருத்தணியில் நின்று செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை சென்ட்ரலில் இருந்து மங்களூரு செல்லும் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் (No.12685) மாலை 4.20 மணிக்கு பதிலாக 2 மணி நேரம் 10 நிமிடம் தாமதமாக மாலை 6.30 மணிக்கு சென்ட்ரலில் இருந்து கிளம்பும்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து மைசூரு செல்லும் வந்தே பாரத் ரயில் (No.20664) 5 மணிக்கு பதிலாக 1.45 மணி நேரம் தாமதமாக மாலை 6.45 மணிக்கு கிளம்பும் என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.
