மதுரை கோட்டத்தில் 25 ரயில் நிலையங்களில் பயணச் சீட்டுகளை விற்பனை செய்வதற்காக முகவர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மதுரை மாவட்டத்தில்
- கூடல் நகர்
- சமயநல்லூர்
- வாடிப்பட்டி
திண்டுக்கல் மாவட்டத்தில்
- வடமதுரை
- தாமரைப்பாடி
- அய்யலூர்
திருச்சி மாவட்டத்தில்
- குமாரமங்கலம்
- கல்பட்டி சத்திரம்
- வையம்பட்டி
- கொளத்தூர்
- பூங்குடி
புதுக்கோட்டை மாவட்டத்தில்
- புதுக்கோட்டை
- திருமயம்
- கீரனூர்
- வெள்ளனூர்
சிவகங்கை மாவட்டத்தில்
- சிவகங்கை
- பனங்குடி
- மேலக்கொன்ன குளம்
- செட்டிநாடு
- கல்லல்
ராமநாதபுரம் மாவட்டத்தில்
- சூடியூர்
விருதுநகர் மாவட்டத்தில்
- கள்ளிக்குடி
- துலுக்கபட்டி,
திருநெல்வேலி மாவட்டத்தில்
- கங்கை கொண்டான்
- தாழையூத்து
ஆகிய ரயில் நிலையங்களில் பயணச்சீட்டு முகவர்கள் நியமிக்கப்பட இருக்கின்றனர்.
விண்ணப்பிப்பது எப்படி?
தகுதி: ரயில் நிலையங்கள் உள்ள பகுதிகளைச் சேர்ந்தவர்கள் அந்தந்த மாவட்டங்களில் விண்ணப்பிக்கலாம்
முகவராக விண்ணப்பிக்க 18 வயது நிறைவடைந்திருக்க வேண்டும்
கமிஷன் எவ்வளவு கிடைக்கும்?
- ரூபாய் 20,000 வரையிலான பயணச்சீட்டு விற்பனைக்கு 25%
- ரூபாய் 1 லட்சம் வரையிலான பயணச் சீட்டு விற்பனைக்கு 15% கமிஷன்
- ரூபாய் 1 லட்சத்துக்கும் அதிகமான பயணச் சீட்டு விற்பனைக்கு 4 % அல்லது முகவர் குறிப்பிட்ட விழுக்காடு
விண்ணப்பிக்க கடைசி நாள்: ஆகஸ்ட் 25 மாலை 3 மணி
விண்ணப்ப கட்டணம்: ரூ. 1,120
டெபாசிட் தொகை: ரயில் நிலையங்களுக்கு ஏற்ப ரூ.2,000 அல்லது ரூ.5,000
முகவர்கள் ரயில் நிலையங்களில் முன்பதிவு இல்லாத பயண சீட்டுகள், சீசன் டிக்கெட்டுகளை விற்பனை செய்யலாம்.
கட்டண சலுகை, பயண சீட்டுக்களை ரயில் நிலைய மேலாளர் அனுமதியுடன் வழங்கலாம்
கூடுதல் விவரங்களுக்கு: https://sr.indianrailways.gov.in
