5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

Published On:

| By indhu

Good news! - Chance of heavy rain in 5 districts on June 22!

ஜூன் 22ஆம் தேதி தமிழகத்தில் உள்ள 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

இது குறித்து, தென் மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் செந்தாமரை கண்ணன் இன்று (ஜூன் 18) வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் இன்று முதல் ஜூன் 24-ஆம் தேதி வரை இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதேபோல், ஜூன் 22ஆம் தேதி தமிழகத்தில் உள்ள நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை

இன்று முதல் ஜூன் 19ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை பொதுவாக இயல்பை ஒட்டி இருக்கக்கூடும்

சென்னை வானிலை முன்னறிவிப்பு

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணிநேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இன்று அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

தமிழக கடலோரப்பகுதிகள்

இன்று (ஜூன் 18) முதல் ஜூன் 22ஆம் தேதி வரை மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 – 45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.

வங்கக்கடல் பகுதிகள்

மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35-45 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். எனவே, மேல் குறிப்பிட்டுள்ள பகுதிகளில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்” என அறிவுறுத்தப்பட்டுள்ளது

இந்து

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மாநில அந்தஸ்தை இழந்து மாம்பழம் சின்னம் கோரும் பாமக

ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநர், நடத்துநர்களை தேடும் நெல்லை SETC!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share