திருவண்ணாமலை, ராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பூமிக்கு அடியில் தங்கம் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக இந்திய புவியியல் ஆய்வு மையத்தின் இயக்குநர் விஜயகுமார் தெரிவித்துள்ளார்
இந்திய புவியியல் ஆய்வு மையத்தின் இயக்குநர் சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “நாடு முழுவதும் கிடைக்கும் கனிம வளங்கள் குறித்து புவியியல் துறை சார்பில் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. அந்த ஆய்வின் அறிக்கை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.gold under earth in tiruvannamalai
தமிழ்நாட்டில் நிலத்துக்கு அடியில் சுண்ணாம்புக் கற்கள் அதிகம் இருக்கின்றன. திருவண்ணாமலை, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நிலத்துக்கு அடியில் தங்கம் கிடைப்பதற்காக சாத்தியக்கூறுகள் உள்ளன. இது தொடர்பாக ஆய்வுகள் நடத்தி வருகிறோம். தமிழகத்தில் உள்ள கனிம வளங்கள் குறித்து ஆய்வு செய்தபோது, பேட்டரி தயாரிக்கப் பயன்படுத்தப்படும் லித்தியம் இருப்பதும் தெரிய வந்துள்ளது. gold under earth in tiruvannamalai
பூமிக்கு அடியில் நில அதிர்வுகள் தொடர்ந்து நடந்து கொண்டேதான் இருக்கும். அவை உணரப்படும் அளவுக்கு இல்லாதவரை பாதிப்பில்லை. வங்கக் கடலையொட்டிய தமிழக நிலப்பரப்பில் சென்னை மண்டலத்தின் கீழ்ப்பகுதியில் பூமிக்கு அடியில் கருங்கல் பாறைகள்தான் இருக்கின்றன. இதனால், சென்னைக்கு நிலநடுக்கம், பூகம்ப பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்பு குறைவாகவே உள்ளது. கடற்கரை பகுதிகளில் வானுயற கட்டடங்களை எழுப்புவதை தவிர்க்க வேண்டும்” என்று தெரிவித்தார்.