தீபாவளி பண்டிகைக்கு பிறகு தொடர்ந்து மூன்றாவது நாளாக தங்கம் விலை குறைந்து வருகிறது.
அதன்படி சென்னையில் இன்று (அக்டோபர் 23) காலையில் 22 காரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூபாய் 40 குறைந்து ரூ.11,500 க்கும், ஒரு சவரனுக்கு ரூபாய் 320 குறைந்து, ரூ.92,000க்கும் விற்பனையாகி வருகிறது.
அதே போன்று 24 காரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூபாய் 43 குறைந்து ரூ.12,546க்கும், ஒரு சவரனுக்கு ரூபாய் 344 குறைந்து, ரூ.1,00,368க்கும் விற்பனையாகி வருகிறது.
வெள்ளி விலையானது நேற்று கிராமுக்கு 5 ரூபாய் குறைந்த நிலையில், இன்று ஒரு கிராமுக்கு மேலும் ரூ.1 குறைந்து ரூ.174க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூபாய் 1000 குறைந்து ரூ.1,74,000க்கும் விற்பனையாகி வருகிறது.
கடந்த செப்டம்பர் மாதம் ஒரு சவரன் தங்கம் ரூ.80 ஆயிரத்தை கடந்த நிலையில், இந்த மாதம் ரூ.90 ஆயிரத்தை கடந்தது.
இந்த நிலையில் கடந்த 20ஆம் தேதி கொண்டாடப்பட்ட தீபாவளியை ஒட்டி தங்கம் விலை ரூ.1 லட்சத்தை நெருங்கி வந்தது. எனினும் தொடர்ந்து அதன்பின்னர் தொடர்ந்து மூன்றாவது நாளாக தங்கம் வெள்ளி விலை வெகுவாக குறைந்து வருகிறது. இது நகைப்பிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
