இந்த மாதம் தொடக்கம் முதல் தங்கம், வெள்ளி விலையானது ஏற்ற, இறக்கத்துடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அந்தவகையில், சென்னையில் இன்று (ஜூன் 11) 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.75 உயர்ந்து ரூ.9,020-க்கும், ஒரு சவரன் ரூ.600 உயர்ந்து ரூ.72,160-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.82 உயர்ந்து ரூ.9,840-க்கும், ஒரு சவரன் ரூ.656 உயர்ந்து ரூ.78,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையைப் பொறுத்தவரையில் மாற்றமில்லாமல், ஒரு கிராம் வெள்ளி ரூ.119-க்கும், ஒரு கிலோ ரூ.1,19,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. Gold Silver rate june 11 2025