ஒரேநாளில் 2வது முறையாக உயர்ந்த தங்கம் விலை… ரூ.76 ஆயிரம் கடந்தது!

Published On:

| By christopher

Gold price crosses 83000 in Chennai today

சென்னையில் தங்கம் விலை இன்று (ஆகஸ்ட் 29) ஒரே நாளில் 2வது முறையாக உயர்ந்து ஒரு சவரன் தற்போது ரூ. 76,280க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அமெரிக்காவின் 50 சதவீத வரிவிதிப்பு மற்றும் தொடர்ந்து வரும் சுபமுகூர்த்த தினங்கள் காரணமாக கடந்த சில நாட்களாக ஆபரணத்தங்கத்தின் விலை சரமாரியாக உயர்ந்து வருகிறது.

ADVERTISEMENT

அதன்படி சென்னையில் இன்று காலையில் 22 காரட் ஆபரண தங்கம் ஒரு கிராமுக்கு ரூபாய் 65 உயர்ந்து ரூ.9,470க்கு விற்பனை செய்யப்பட்டது. அதேபோன்று சவரனுக்கு ரூபாய் 520 உயர்ந்து, ரூ.75,760க்கு விற்பனையானது.

இந்த நிலையில் மாலையில் 22 காரட் ஆபரண தங்கம் ஒரு கிராமுக்கு மேலும் ரூ.65 உயர்ந்து ரூ.9,535க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.520 உயர்ந்து, ரூ.76,280க்கு விற்பனையாகிறது.

ADVERTISEMENT

ஒரேநாளில் ரூ.1,040 உயர்ந்ததன் மூலம் ஒரு சவரன் தங்கம் மீண்டும் 76 ஆயிரத்தை கடந்துள்ளது. இது நகைப்பிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share