தங்கம் விலை இன்று (ஜூன் 8) சவரனுக்கு ரூ.1,520 குறைந்து ரூ.53,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நேற்று (ஜூன் 7) தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.6,840க்கும், ஒரு சவரன் ரூ.320 உயர்ந்து தங்கம் ரூ.54,720க்கு விற்பனையானது. இதனைத் தொடர்ந்து இன்று தங்கம் விலை சவரன் ரூ.53,200க்கு விற்பனை செய்யப்படுகிறது.
22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.190 குறைந்து ரூ.6,650க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.1,520 குறைந்து ரூ.53,200க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.190 குறைந்து ரூ.7,120க்கும், ஒரு சவரன் ரூ.56,960க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை நேற்று ஒரு கிராம் ரூ.100.50க்கும், ஒரு கிலோ ரூ.1,00,500க்கும் விற்பனை செய்யப்பட்டது. இன்று (ஜூன் 8) ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.4,500 குறைந்துள்ளது.
ஒரு கிராம் வெள்ளியின் விலை 4 ரூபாய் 50 காசுகள் குறைந்து, ரூ.96க்கும், ஒரு கிலோ ரூ.96,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
