தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், இன்று சவரனுக்கு 280 ரூபாய் குறைந்துள்ளது. Gold rate today price
தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து 70 ஆயிரம் ரூபாயை கடந்து விற்பனையாகி வந்தது.
இந்தநிலையில், நகை பிரியர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது.
நேற்று தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.8,755க்கும், சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.70,040 க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், இன்று (ஏப்ரல் 15) ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.35 குறைந்து ரூ.8,720-க்கும், சவரனுக்கு ரூ.280 குறைந்து ரூ.69,760-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.