சென்னையில் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 13) அதிரடியாக சவரனுக்கு ரூ.1,560 உயா்ந்துள்ளது. gold rate today chennai
தங்கம் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வந்த நிலையில் கடந்த இரண்டு நாள்களாக உயர்ந்து வருகிறது. அதன்படி இரு தினங்களில் ரூ.1,241 உயர்ந்த தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,560 உயர்ந்துள்ளது.
இதனால் ஒரு சவரன் ரூ.74,360-க்கு விற்பனையாகிறது. மீண்டும் ஒரு சவரன் தங்கம் ரூ.75 ஆயிரத்தை நெருங்கியிருப்பது நகை பிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 3 நாள்களில் மட்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,801 உயா்ந்துள்ளது.
வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1.10 உயர்ந்து ரூ.120-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,100 உயர்ந்து ரூ.1,20,000-க்கும் விற்பனையாகிறது. gold rate today chennai