சென்னையில் இன்று (மே 15) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.28௦ உயர்ந்து ரூ.53,800க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நேற்றைய தினம் (மே 14 ) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ரூ.6,690 க்கும், ஒரு சவரன் ரூ.53,520க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் தங்கம் விலை சவரனுக்கு இன்று ரூ.280 உயர்ந்துள்ளது.
சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.35 உயர்ந்து, ரூ.6,725 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு சவரன் தங்கம் ரூ.280 உயர்ந்து, ரூ.53,800க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தொடர்ந்து, 24 கேரட் ஆபரணத் தங்கம் விலை கிராம் ரூ.35 உயர்ந்து, ரூ.7,195 க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.57,560 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை இன்று கிராமுக்கு 30 காசுகள் உயர்ந்து ரூ.91க்கும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.300 உயர்ந்து ரூ.91,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…