சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(அக்டோபர் 23) சவரனுக்கு ரூ.320 உயர்ந்துள்ளது.
அதன்படி சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.40 உயர்ந்து ரூ.7,340-க்கும், ஒரு சவரன் ரூ.320 உயர்ந்து ரூ.58,720-க்கும் விற்பனையாகி வருகிறது.
24 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.40 உயர்ந்து ரூ.7,795-க்கும், ஒரு சவரன் ரூ.320 உயர்ந்து ரூ.62,360-க்கும் விற்பனையாகி வருகிறது.
வெள்ளி விலையைப் பொறுத்தவரை ஒரு கிராம் வெள்ளி ரூ.2 கூடி, ரூ.112-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2000 கூடி, ரூ.1,12,000க்கும் இன்று விற்பனையாகி வருகிறது.
இந்த நிலைமை தொடர்ந்து நீடித்தால், தீபாவளிக்கு முன்பு தங்க விலை ரூ.60,000 கடந்துவிடும் என்று மக்கள் அச்சப்படுகிறார்கள்.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
சீட்டுக்கட்டு போல் சரிந்த 6 மாடி கட்டடம்… பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு!
சிறை கைதி சித்ரவதை… டிஐஜி ராஜலட்சுமி உட்பட 3 பேர் சஸ்பெண்ட்!
முன்னாள் அதிமுக அமைச்சர் வைத்திலிங்கம் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை!