சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,760 அதிகரித்துள்ளது.
தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. கடந்த மே 19ஆம் தேதி ஒரு கிராம் ரூ.8 ,755-க்கும், சவரன் ரூ.70,040-க்கும் விற்பனை ஆனது. நேற்று கிராமுக்கு ரூ.45 குறைந்து ரூ.8,710-க்கும், சவரனுக்கு ரூ.360 குறைந்து ரூ.69, 680-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் இன்று (மே 21) தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. சவரனுக்கு ரூ.1,760 உயர்ந்து ஒரு சவரன் ரூ.71,440-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிராமுக்கு ரூ.220 உயர்ந்து ரூ.8,930-க்கு விற்பனையாகிறது.
ஒரே நாளில் ரூ.1,760 உயர்ந்துள்ளதால் நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
வெள்ளி விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு ரூ.3 உயர்ந்து ரூ.111-க்கும், கிலோவுக்கு ரூ.3,000 உயர்ந்து ரூ.1 லட்சத்து 11 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.