அட்சய திருதியை முன்னிட்டு இன்று (மே 10) ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.53 ஆயிரத்தை கடந்துள்ளது.
தமிழ் மாதமான சித்திரை மாதத்தின் அமாவாசைக்கு பிறகு வரும் வளர்பிறை திருதியை அட்சய திருதியை என கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டு அட்சய திருதியை இன்று அதிகாலை 4.17 மணிக்கு தொடங்கி 11-ந்தேதி மதியம் 2.50 மணிக்கு முடிவடைகிறது.
அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால், செல்வம் பெருகும் என்ற நம்பிக்கை பொதுமக்களிடம் உள்ளது.
இந்தநிலையில் இன்று அதிகாலையிலேயே சென்னையில் தங்கம் விலை உயர்ந்துள்ளது.
நேற்றைய தினம் (மே 9) ஒரு கிராம் தங்கம் ரூ.6,615க்கும், சவரன் ரூ. 52,920க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்துள்ளது.
அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.45 உயர்ந்து, ரூ.6,660க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், சவரனுக்கு ரூ.360 உயர்ந்து, ரூ.53,280க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.1.30 காசுகள் அதிகரித்து ரூ.90க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,300 உயர்ந்து ரூ.90,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
பஞ்சாப்-க்கு எதிராக விராட் கோலி அடித்து நொறுக்கிய சாதனைகள் என்ன?
ஏர் இந்தியா விமானங்கள் ரத்து: அதிகரிக்கும் விமானக் கட்டணங்கள்!