உயர்ந்த தங்கம் விலை… எவ்வளவுன்னு பாருங்க!

Published On:

| By indhu

Gold Rate: High gold price.. - Find out how much!

தங்கம் விலை இன்று (மே 25) சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.53,240க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்ந்து 2 நாட்களாக தங்கம் விலை அதிரடியாக குறைந்த நிலையில், இன்று தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது. நேற்று (மே 24) ஒரு கிராம் தங்கம் ரூ.6,650க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.53,200க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.6,655க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.40 உயர்ந்து, ரூ.53,240க்கு விற்பனையாகிறது.

24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.7,125க்கும், ஒரு சவரன் ரூ.57,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை நேற்று கிராம் ரூ.96.50க்கும், ஒரு கிலோ ரூ.96,500க்கும் விற்பனை செய்யப்பட்டது.  இன்று ஒரு கிலோ தங்கம் விலை ரூ.500 குறைந்துள்ளது.

ஒரு கிராம் வெள்ளியின் விலை 50 காசுகள் குறைந்து ரூ.96க்கும், ஒரு கிலோ ரூ.500 குறைந்து ரூ.96,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இந்து

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

#HBD Goundamani : வாழ்க கவுண்டர் ‘மகான்’!

“நிர்வாக குளறுபடியால் சிக்கலில் போக்குவரத்து கழகம்” : சிஐடியு சௌந்தரராஜன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share