Gold Rate: ஷாக் கொடுக்கும் தங்கம் விலை: சவரன் ரூ.53 ஆயிரத்திற்கு விற்பனை!

Published On:

| By indhu

Gold Rate: Gold price high again - Savaran sold at Rs.52 thousand

நேற்று (ஏப்ரல் 5) தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்த நிலையில், இன்று (ஏப்ரல் 6) 22 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.840 அதிகரித்துள்ளது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஏப்ரல் 6) கிராமுக்கு ரூ.105  உயர்ந்து, ரூ.6,615க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், சவரனுக்கு ரூ.840 உயர்ந்து ரூ.52,920க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்ந்து, 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.105 உயர்ந்து, ரூ.7,085க்கு விற்பனையாகிறது. அதேபோன்று, 24 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.840 உயர்ந்து, ரூ.56,680க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில், வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.2 அதிகரித்து, ரூ.87க்கு விற்பனையாகிறது. அதேசமயம், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.2,000 அதிகரித்து, ரூ.87,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்து

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

திமுக விக்கிரவாண்டி எம்எல்ஏ புகழேந்தி கவலைக்கிடம்!

இரண்டாவது நாளாக தொடரும் ஐடி ரெய்டு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share