கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை தமிழ் புத்தாண்டில் சற்று குறைந்துள்ளது நகை பிரியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. gold rate drop rs 120 in tamil new year
22 சவரன் தங்கம் இன்று (ஏப்ரல் 14) கிராமிற்கு 15 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 8,755 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதன்படி, சவரனுக்கு 120 ரூபாய் விலை குறைந்து, ஒரு சவரன் 70,040 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
வெள்ளி விலையும் குறைந்துள்ளது. இன்று ஒரு கிராம் வெள்ளி 10 பைசா குறைந்து 109.90 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 1 லட்சத்து 9 ஆயிரத்து 900 ரூபாய்க்கு விற்பனையாகிறது.