ADVERTISEMENT

Gold Rate : தங்கம் விலை வீழ்ச்சி… பெண்கள் மகிழ்ச்சி!

Published On:

| By indhu

Gold Rate: Dramatically low gold price - happy women!

சென்னையில் இன்று (மே 1) 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.920 குறைந்து, ரூ.53,080க்கு விற்பனை செய்யப்படுகிறது.

நேற்றைய தினம் (ஏப்ரல் 30) ஒரு கிராம் தங்கம் ரூ.6,750 க்கும், சவரன் ரூ.54,000க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.920 குறைந்துள்ளது.

ADVERTISEMENT

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு, ரூ.115 குறைந்து, ரூ.6,635க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், சவரனுக்கு ரூ.920 குறைந்து, ரூ.53,080க்கு விற்பனை செய்யப்படுகிறது.

24 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.115 குறைந்து, ரூ.7,105க்கும், சவரன் ரூ.920 குறைந்து ரூ.56,840க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

சென்னையில் வெள்ளி விலையில் கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ரூ. 86.50-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.500 குறைந்து ரூ.86,500க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ஏப்ரல் மாதத்தில் ஏற்ற இறக்கமாக இருந்த தங்கம் விலை, மே மாதம் முதல் நாளில் குறைந்துள்ளது.

ADVERTISEMENT

இந்து 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ரஜினியின் கூலி டீசரில் வந்த இசை… நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா

வேலைவாய்ப்பு: சென்னை பல்கலைக்கழகத்தில் பணி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share