தங்கம் விலை கடந்த சில தினங்களாக குறைந்து வரும் நிலையில் இன்று (டிசம்பர் 13) சவரனுக்கு ரூ.160 குறைந்துள்ளது.
சென்னையில் தங்கத்தின் விலை டிசம்பர் 4ஆம் தேதி புதிய உச்சத்தை எட்டியது. அன்றைய தினம் ரூ.47,800-க்கு ஒரு சவரன் தங்கம் விற்பனை செய்யப்பட்டது.
இது நகை பிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் சமீப நாட்களாக தங்கத்தின் விலை இறங்கு முகமாக இருக்கிறது. டிசம்பர் 5ஆம் தேதி முதல் கடந்த 9 நாட்களில் தங்கத்தின் விலை ரூ. 2,200 குறைந்துள்ளது.
இன்று கிராமுக்கு ரூ.20ம், சவரனுக்கு ரூ.160ம் குறைந்துள்ளது. அதன்படி ஒரு கிராம் தங்கம் ரூ.5,700க்கும், ஒரு சவரன் ரூ. 45,600-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியை பொறுத்தவரை கிராமுக்கு 70 காசுகள் குறைந்து கிலோ ரூ.77,000-க்கு விற்பனையாகிறது.
பிரியா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
சென்னை வெள்ளம்! பாஜக கராத்தே தியாகராஜன் அட்டாக்… அமைச்சர் துரைமுருகன் ஆக்ஷன்!
Video: அடிச்ச அடியில இப்படி நொறுங்கி போச்சே… மன்னிப்பு கேட்ட ரிங்கு சிங்!
