தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.480 குறைந்துள்ளது. Gold rate chennai today
அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் புதிய வரி விதிப்புகளால் உலக நாடுகளிடையே பொருளாதார நிலையற்ற தன்மை ஏற்பட்டிருக்கிறது.
இந்த சூழலில் கடந்த மார்ச் இறுதி முதல் தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்தாலும், விலை அதிகரித்தே வந்தது.
இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்த நிலையில், தற்போது தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது.
இன்று (ஏப்ரல் 8) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை, கிராமுக்கு ரூ.60 குறைந்து, ஒரு கிராம் ரூ.8,225-க்கும், சவரனுக்கு ரூ.480 குறைந்து, ஒரு சவரன் ரூ.65,800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையும் கிராமுக்கு ஒரு ரூபாய் குறைந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.102-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,02,000-க்கும் விற்பனையாகிறது. Gold rate chennai today