GOLD RATE: வீழ்வேனென்று நினைத்தாயோ… உச்சம் தொட்டது தங்கம்!

Published On:

| By Manjula

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் இன்று (ஏப்ரல் 3) சவரனுக்கு ரூபாய் 560 அதிகரித்து ரூ.52,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூபாய் 70 அதிகரித்து ரூ.6,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோல 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலையானது சவரனுக்கு ரூ.608 அதிகரித்து ரூபாய் 56,728-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூபாய் 76 அதிகரித்து ரூ.7,091-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியைப் பொறுத்தவரையில் கிராமிற்கு 2 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.84-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூபாய் 84,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்துடன் போட்டிபோட்டு  தற்போது வெள்ளி விலையும் அதிகரித்து வருகிறது.

நேற்று (ஏப்ரல் 2) லேசாக குறைந்த தங்கத்தின் விலை இன்று ஒரேயடியாக அதிகரித்து ரூபாய் 52,௦௦௦ தொட்டுள்ளது. தங்கத்தை பொறுத்தவரை விலை ஏறும் அளவிற்கு விலை குறைவதில்லை. அதோடு வரும் காலங்கள் முகூர்த்த நாட்கள் என்பதால், இனி தங்கம் விலை குறைவது சாத்தியமில்லை என்றே தோன்றுகிறது.

எனவே நகைகள் வாங்க நினைப்பவர்கள் சற்று பொறுத்து விலை இறங்கும் தருவாயில் நகைக்கடை பக்கம் செல்வது தான் நல்ல முடிவாக இருக்கும்.

மஞ்சுளா 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

வேலைவாய்ப்பு : எஸ்.எஸ்.சி அறிவிப்பு!

வெள்ள நிவாரணம் : உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு!

IPL 2024: 156.7 கி.மீ வேகம்… ஜாம்பவான்கள் பட்டியலில் இணைந்த மயங்க் யாதவ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share