தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,480 உயர்ந்துள்ளது. Gold prices rose by Rs 1480
தங்கம் விலை கடந்த ஏப்ரல் 4ஆம் தேதி சவரனுக்கு ரூ.1,280 குறைந்து ரூ.67,200-க்கும், ஏப்ரல் 5ஆம் தேதி சவரனுக்கு ரூ.720 குறைந்து ரூ.66,480க்கும், ஏப்ரல் 7 ஆம் தேதி சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ.66,280-க்கும், ஏப்ரல் 8ஆம் தேதி சவரனுக்கு ரூ. 480 குறைந்து ரூ.65,800-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று (ஏப்ரல் 9) காலை ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.66,320க்கு விற்பனை ஆனது.
தொடர்ந்து இரண்டாவது முறையாக மீண்டும் இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது.
22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.960 அதிடியாக அதிகரித்துள்ளது. அதன்படி ஒரு சவரன் ரூ.67,280-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.120 உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,410-க்கு விற்பனையாகிறது. இன்று ஒரே நாளில் மட்டும் சவரனுக்கு ரூ.1,480 உயர்ந்துள்ளது
வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ஒரு கிராம் ரூ.104-க்கும், ஒரு கிலோ ரூ.1,04,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. Gold prices rose by Rs 1480